இரட்டை குடிஉரிமை பெறுவதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை.
பிறகு எப்படி இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை பெற்றுத் தருவதே எங்கள் இலக்கு என்று அதிமுக சொல்கிறது?
குடிஉரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக தனது 11 வாக்குகளை போடாமல் இருந்திருந்தால் எதிர்த்து வாக்களித்து இருந்தால் 116-114 என்ற விகிதத்தில் மசோதா நிராகரிக்கப்பட்டிருக்கும்.
இன்று இந்த பிரச்னையே வந்திருக்காது.
சென்ற ஆட்சிக் காலத்திலும் பாஜக முயன்று முடியாமல் போன முயற்சி இது ..
இன்று அதிமுக துணை போனதால் நிறைவேறி இருக்கிறது. இந்த துரோகத்தை முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள். அதிமுக வில் உள்ள எந்த முஸ்லிமும் இன்னும் சட்டத்தை ஆதரித்து பேசவில்லை. முகம்மது ஜான் என்ற அதிமுக எம்பி ஜமாஅத் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதுதான் நிலைமை.
இங்கே அகதிகளாக அடைபட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடிஉரிமை தர வேண்டுமா என்பதை பரிசீலிக்கவே பாஜக அரசு தயாராக இல்லை. அவர்களை இந்துக்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழர்கள்.
இந்தியா அயல்நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குடிஉரிமை தர வேறு வழியை பயன்படுத்துகிறது.
\அவர்களுக்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் என்ற ( Overseas Citizenship of India ) உரிமையை வழங்குகிறது. அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. வாக்குரிமை கிடையாது. அதனால் அவர்களுக்கு வேறு எந்த சிறப்பு உரிமையும் கிடையாது.
எனவே ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குட உரிமை தர இயலாது என்கிறது பாஜக அரசு.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வாழ்ந்து வருபவர்கள் எங்கே போவார்கள்?
எப்போது இலங்கை இனப்பிரச்னை முடியும்? எப்போது தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்? யாராலும் விடை தர இயலாத கேள்வி இது.
இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை முக்கியம். அதனால் அவர்கள் இலங்கை போவகே நல்லது என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அங்கே நிலைமை சீராகி விட்டதா?
அதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அவர்கள்.
அங்கே தங்களுக்கு ஆபத்து என்று அவர்கள் கருதினால் இங்கே குடிஉரிமை தர வேண்டியது நமது கடமை. ஆனால் பாஜக அரசுக்கு மட்டும் அவர்கள் மீது எந்த கவலையும் கிடையாது.
உலகம் முழுவதிலும் இலங்கை தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள்.
எப்போது ஈழத்தில் அமைதி திரும்பி அரசியல் உரிமைகள் திரும்ப கிடைக்கிறதோ அன்று அவர்கள் திரும்ப வருவார்கள். அப்போது இவர்களும் விரும்பினால் அங்கே செல்ல என்ன தடை?
அதுவரை நாடற்றவர்களாக இங்கே அடைக்கப்பட்டுக் கிடைக்க வேண்டுமா?
அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள் விரும்பினால் அவர்களுக்கு இந்தியக் குடி உரிமை தர வேண்டும்.
மாறாக அவர்களுக்கு இரட்டை குடி உரிமை பெற்றுத் தருவோம் என்று பசப்புவது ஏமாற்று வேலை?
This website uses cookies.