ஒசாகாவில் நடந்த ஜி 20மாநாட்டின்போது இந்திய பிரதமர் மோடி தன்னிடம் காஷ்மீர் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை வைத்துக்கொண்டு சொன்னார்.
அதிர்ச்சி அடைந்த இந்தியா உடனே தனது வெளிஉறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூலம் மறுப்பு தெரிவித்தது.
ஏன் என்றால் இந்திய பாகிஸ்தான் பிரச்னைகளில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிப்பது இல்லை என்று இரு நாடுகளும் முன்பே ஒப்புக்கொண்டுள்ளன.
எனவே டிரம்ப் சொன்னது பொய் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை இந்திய அரசும் மோடியும் எதிர்கொள்ளும் விதம் சரியில்லை.
ராஜ்நாத் சிங்கும் ஜெய்சங்கரும் மட்டும் மறுத்தால் போதுமா?
சம்பந்தப்பட்டவர் மோடி. அவர்க்கும் டிரம்புக்கும்தான் தெரியும் என்ன பேசினார்கள் என்று.
டிரம்ப் சொல்வதை மறுக்கும் உரிமை மோடிக்கு மட்டுமே உண்டு.
பொதுவாக இரு நாட்டு பிரதமர்கள் பேசும்போது அருகில் இருக்கும் செயலாளர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் பேசிவிட முடியாது.
என்ன இருந்தாலும் மற்றவர்களை விட்டு மறுப்பு தெரிவிப்பதை விட தானே மறுப்பு தெரிவிப்பதுதான் மோடிக்கு மரியாதை தரும்.
இல்லை என்றால் மறுக்க துணிவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்..
அதுவும் எதிர்கட்சிகள் இதை பொறுத்து வெளிநடப்பு செய்த பிறகும் மோடி மௌனம் காப்பது சரியல்ல.
This website uses cookies.